Tuesday, August 19, 2014

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய மேலும் இரண்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவு!

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஆரா யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க, மேலும் இரண்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவு செய் யப்பட்டுள்ளனர். காணாமல் போனோர் தொடர்பான முறை ப்பாடுகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க, இந்தியாவின் அவ்தாஷ்க் கௌஷல் மற்றும் பாகிஸ்தானின் அஹ்மர் பிலால் ஷூபி ஆகியோர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் நேற்று சந்தித்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவிற்கு இதுவரை சுமார் 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ள தாகவும், முறைப்பாடுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார். ஆணைக்குழுவின் விசாரiணை கால எல்லை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் நடவடிக்கைகள், நேர்மையாக இடம்பெறுவதாகவும், அதன் ஜனநாயக வட்டத்தை பலப்படுத்துவதற்கு, நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகவியலாளர் களிடம் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதாக, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, பிராந்திய ரீதியில் தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு நியமித்த விசாரணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com