ஹட்டனில் கடைகள் உடைப்பு! பொலிஸ் நாய் தேடுதல் வேட்டையில்!
ஹட்டன் நகரில் இரண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் காப்புறுதி நிலையம் என்பன இன்று (28)அதிகாலை உடைக்கபட்டிருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
ஹட்டன் பிரதான நகரத்தில் பாதணி விற்பனை நிலையமும் ஹட்டன் மக்கள் வங்கிக்கு அருகிலுள்ள பலசரக்கு கடையுமே இனம் தெரியாதோரால் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொள்ளையிட வந்தவர்கள் எதையுமே கொள்ளையிடாமல் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடை உரிமையாளர்களின் முறைபாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பிக்கும் பொலிஸார் பொலிஸ் நாயை வைத்து சந்தேக நபர்களை தேடும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment