சுவிட்சர்லாந்துக்கு ஆட்கடத்தல் செய்யமுற்பட்ட சுவிஸ் தமிழ்ப் பெண்ணொருவர் கட்டுநாயக்காவில் கைது.
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமாக ஆட்கடத்தல் செய்ய முற்பட்ட இலங்கைப்பெண்ணொருவர் சில நாட்களுக்கு முன்னர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுவிட்சர்லாந்தில் பாடன் பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்றும் தனது கணவரின் கடவுச்சீட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை கொண்டு சகோதரியின் கணவனை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துசெல்ல முற்பட்டபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment