ஹரீனின் பொய்முகத் திரை பற்றி புட்டுப் புட்டாய் வைத்தார் ஜனாதிபதி மகிந்த!
நேற்று முன்தினம் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கான கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்தவினால் புது விடயமொன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி வேட் பாளரான ஹரீன் பிரனாந்து தொடர்பிலேயே ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
“நான் சென்றமுறை ஊவாவிற்குச் சென்ற வேளை, அங்கிருந்த மக்கள் ஹரீன் செய்கின்ற பெரிய யானை போலும் பொய்யொன்றை என் முன் வைத்தனர். ஹரீன் ஒரே மாதிரியான 6 வாகனங்களை எடுத்துக் கொண்டு, ஒரே மாதிரியான உட்பகுதி காணாத ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார். அவர் போன்ற அறுவரை வாகனங்களில் ஏற்றி ஆறு இடங்களுக்கு அனுப்புவார். அவர்களும் சூழவுள்ள மக்களுக்கு வாகனத்தில் உள்ளே இருந்துகொண்டு கையசைத்துச் செல்வர். பொதுமக்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றனர். இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்கின்றார்கள்.
மேலும், பதுளையில் ஆளுக்கு அவ்வளவு பெரிய சனம் கிடையாது. எனவே, அவர்கள் கம்பஹாவிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்றுதான் அங்கு பிரச்சாரங்களை, கூட்டங்களை நடாத்துகின்றார். எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அங்கு போய் இவர்களின் பொய்முகங்களை மக்களுக்குத் தெளிவுறுத்த வேண்டும்” என ஜனாதிபதி கூறியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment