இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எவரும் இல்லை! பிரச்சினைக்கு நீண்டகால தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு!
இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர் வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையை, இந்திய பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறு வதை தடுப்பதற்கும், அவர்களுக்கு நிவாரணங்களை பெற் றுக்கொடுப்பது தொடர்பாகவும், இப்பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படவுள்ளது. இந்திய பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபெந்த்ரா மிஸ்ரா தலைமையில் நடைபெறும் இப்பேச்சுவார்த் தையில், விவசாய, உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து, மத்திய அரசாங்கத்திற்கு அழுத் தங்களை மேற்கொண்டு வருவதனால், மீனவர் பிரச்சினை ஒரு உணர்வுபூர்வமான பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்திய பிரதமரின் பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்தார். அத்துடன் அண்மையில் இந்தியாவின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 94 மீனவர்களை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். தற்போது இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எவரும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர், இலங்கை அரசாங்கம் இதுவரை 225 மீனவர்களை விடுதலை செய்துள்ளது.
0 comments :
Post a Comment