ஹட்டன் மருந்தகங்களுக்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் விஜயம்!
ஹட்டன் நகரில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் (பாமசி) நேற்று நுவரெலியா மாவட்ட விலைக் கட்டுப்பா ட்டு அதிகாரிகள் தீடீர் சோதனைக்குட்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது 4 மருந்தகங்களில் கலாவதியான மருந்து வகைகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு எதிராக அட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்தார்.
நேற்று திடீர் சோதனைக்குட்படுத்தும்போது இவ்வாறு சிக்கிய பல மருந்து வகைகளை விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இனிமேல் மக்கள் மருந்து வகைகளை வாங்கும்போது கலாவதி திகதியை பார்த்து வாங்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் சோதனைக்குட்படுத்த இருப்பதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment