மின்சாரம் தாக்கி மாணவன் பலி! கபரகல்ல தோட்டத்தில் சம்பவம்! (படங்கள்)
நுவரெலியா மாவட்டம் மத்துரட்ட பதியபலல்ல கபரகல்ல தோட்ட தமிழ் வித்தியாலத்தில் ஆண்டு 09 இல் கல்வி பயின்று வரும் வீ.அரவிந்தகுமார் என்னும் மாணவன் மின்சாரம் தாக்கி மாணவன் பலியாகியுள்ளான்.
பாடசாலை விடுமுறை காரணமாக புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தில் உள்ள தனது பெரிய அப்பாவின் வீட்டுக்கு வந்திருந்த வேலையில் இலய குடியிருப்பின் மேல் காணப்படும் அட்டல் என அமைக்கப்படும்; ஒலிபெருக்கி சாதனம் ஒன்றை எடுக்கச் சென்ற வேலையிலேயே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்
முறையற்ற மின்சார இணைப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. புஸ்ஸல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment