கொழும்பு வீதிகள் இரவுவேளைகளில் தொடர்ந்து மூடப்படும்! - பொலிஸ் தலைமையகம்
கொழும்பு,கலதாரி சுற்றுவட்ட நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (20) முதல் தொடர்ந்து 06 தினங்களுக்கு இரவு 8.30 மணி தொடக்கம் காலை 5.30 மணிவரை சில அண்மித்த வீதிகள் மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதற்கேற்ப, காலி வீதி (காலிமுகத்திடல் சுற்றுவட்டாரம்), லோட்டஸ் வீதி (செரமிக் சந்தியில் இருந்து), வங்கி மாவத்தை (ஜனாதிபதி மாவத்தை வங்கி மாவத்தை சந்தி), கலதாரி சுற்றுவட்ட வைத்திய வீதி என்பனவே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment