கிராமத்தான் கலீபாவின் “நழுவி” நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)
கவிஞர் கிராமத்தான் (பொத்துவில்) கலீபாவின் “நழுவி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை மருதானை வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் கலந்து சிறப்பித்த்தார். புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலையில் பிரதம அதிதியிடமிருந்து தொழிலதிபர் மீராலெப்பை முஸம்மில் “நழுவி” கவிதை நூல் முதற் பிரதியினை பெற்றுக்கொன்டார்.
இந்நூலுக்கான திறனாய்வு பேராசிரியர் துரை மனோகரன் மற்றும் கவிஞர் நாச்சியார் தீவு பர்வீன் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் மற்றும் கலைவாதி கலீல் ஆகியாரினால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது
பட உதவி - அஷ்ரப் ஏ. சமத்
(கேஎப்)
0 comments :
Post a Comment