சேலம் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுத குவியல் புலிகளுடையதா? வீரப்பனுடையதா?
சேலம் மேட்டூர் அருகே வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுத குவியல் வீரப்பனுக்குச் சொந்தமானதா அல்லது எல்.ரி.ரி.ஈ னர் பதுக்கியதா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது.
எல்.ரி.ரி.ஈ னர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு முகாமிட்டு போர் பயிற்சிகள் பெற்றனர். அப்போது எல்.ரி.ரி.ஈ.யால் இந்த ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டதா அல்லது வேறு தீவிரவாத அமைப்புகள் பதுக்கியதா அல்லது வீரப்பன் பதுக்கியதா என பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகில் பச்சமலை காப்புகாடு உள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் குழிகள் தோண்டியபோது ஏராளமான ஆயுதங்கள், குண்டுகள் செய்வதற்கான வெடிப் பொருட்கள் சிக்கின.
மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான பொலிஸார் அங்கு விரைந்து, அவற்றை அப்புறப்படுத்தி இரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர்.
பொலிஸார், அப்பகுதியில் உள்ள முற்புதரில் 3 கையெறி குண்டுகளை நேற்று காலை கண்டெடுத்தனர். ஆயுத புதையல் கிடைத்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் இருந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டமும் நவீன துப்பாக்கி, கண்ணி வெடிகளை பயன்படுத்தி வந்தது. எனவே, வீரப்பன் கும்பலை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன் இரும்பு பெரலில் எல்.டி.டி என்று எழுதப்பட்டிருப்பதால் இது புலிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
1 comments :
புலிகளுக்கு செந்தமானதா வீரப்பனுக்குச் சொந்தமானதா இவர்கள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றான தொப்புள் கொடி உறவுகள்.
Post a Comment