Thursday, August 7, 2014

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான தீர்ப்பை வழங்கியது ஐ. நா! இருவருக்கு ஆயுள் தண்டனை!

1975–1979 காலப்பகுதியில் இடம்பெற்ற கம்போடிய யுத்த த்தில் பாரிய போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்னாள் பிரதி அதிபர் நோன் சே மற்றும் முன்னாள் தேசிய மாவோ யிஸ்ட் தலைவர் கியு சம்பன் ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கம்போடியாவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணையின் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பிரகாரம்,யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கம்போடியாவின் முன்னாள் பிரதி அதிபர் நோன் சே (வயது 88) மற்றும் முன்னாள் தேசிய மாவோயிஸ்ட் தலைவர் கியு சம்பன் (வயது 83) ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக் குற்ற தீர்ப்பாயம் இன்று தெரிவித்தது.

அக்காலப்பகுதியில் கம்போடியாவின் தலைவராக இருந்த பொல் பொட்டினால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தில் சுமார் இரண்டு மில்லியன் பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் 1998ம் ஆண்டு பொல்பொட் உயிரிழந்தார். இந்த யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நோன் சே மற்றும் கியு சம்பன் ஆகிய இரண்டு பேர் மாத்திரமே தற்போது உயிருடன் உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராகவே இன்று இத்தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com