Wednesday, August 27, 2014

இன்னும் இரண்டு கொள்கலன்களில் போதைப் பொருள்…?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருகொடவத்தையிலும் கட்டுகஸ்தோட்டையிலும் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கொண்டு வந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஷகீஸ் அஹமட் என்ற பெயருடைய பாகிஸ்தானியரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்படி, பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள இரு கொள்கலனகள் சுங்கத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து பாரிய அளவில் வெங்காயம் இறக்குமதி செய்வதாகக் குறிப்பிட்டு, இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அறைக்கும் இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் பற்றியும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரான ஷகீஸ் அஹமடிடம் விசாரணைகள் மேற்கொண்ட காலகட்டத்திலேயே இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com