காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயற்சித்த மாணவி உயிரிழப்பு!
வவுனியா, சைவப்பிரகாச கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த வேளை மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா, காத்தார் சின்னக்குள த்தைச் சேர்ந்த 18 வயது மாணவியே இவ்வாறு உயிரி ழந்தவர் ஆவார்.
ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையில் தோற்ற இருந்த நிலையிலேயே குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளார். கடந்த 29ஆம் திகதி மாலை வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் மாணவி சேலையில் தூக்கிட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த மாணவியின் தாயார் மாணவியை கண்டதும் அயலவர்களின் உதவியுடன் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உடன் அனுமதித்தார். எனினும் கடந்த ஆறு நாட்களாக கோமா நிலையில் இருந்த மாணவி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட வவுனியா திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், மரண மடைந்த மாணவியால் எழுத்தப்பட்ட கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர் எனவும் காதல் விவகாரமே மரணத்திற்கு காரணம் எனவும் மேலும் தெரிவித்தனர். குறித்த மாணவியை காதலித்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர். ஆனால் இளைஞன் தற்போது அப் பகுதியில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment