தங்களை விடுதலை செய்தது தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றனர் இந்திய மீனவர்கள்!
இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டது தொடர்பில் இந்திய மீனவர்கள் ஜனாதிபதிக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். இந்திய மீனபிடிச் சங்கத்தின் தலைவரான வூ.பீ. செசுராஜா இதுதொடர்பில், இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானம் எடுத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் இராமேஷ்வரம் மீனவர்கள், இந்திய பிராந்திய அரசு, மத்திய அரசு என்பனவும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்தத் தீர்மானத்திற்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்குமுகமாக இந்திய அரசினால் அந்நாட்டு கர்நாடக பிராந்தியத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்வதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment