ஐ. தே கட்சியும், ரணிலும், செய்த கரைபடிந்த சம்பவங்களை புகையிரத ஊழியர்கள் மறக்கவில்லையாம்!
ஐ.தே.க உறுப்பினர்கள் வந்தவழியால் தப்பியோடினர்.
புகையிரத சேவையின் நிலைமைகளை கண்டறிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், அங்கு விஜயம் செய்த வேளையில், புகையிரத சேவைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட அழிவுகள் உட்பட அவர்களது வரலாற்று கரைபடிந்த சம்பவங்கள் தொடர்பி லும், புகையிரத ஊழியர்குள் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நினைவுகூர மறக்கவில்லை.
முன்னறிவித்தலின்றி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான அஜித் மான்ன பெரும, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரட்ன, ஆர். யோகராஜன், அஜித் பி. பெரேரா ஆகியோர் இன்று , மருதானை புகையிரத நிலையத்திற்கு சென்றனர்.
புகையிரத பொது முகாமையாளர், அலுவலகத்தில் இருக்கவில்லை. இருப்பினும் மேலதிக பொது முகாமையாளர் ஏ.யூ.கே. தொடங்கொட, பாராளுமன்ற உறுப்பின ர்களின் கேள்விகளுக்கு, இரண்டரை மணித்தியாலங்களாக பதிலளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்துள்ளதை கேள்வியுற்ற புகையிரத ஊழியர்கள் அங்கு உடன் வருகை தந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது புகையிரத சேவைக்கு மேற்கொண்ட அழிவுகளை நினைவுகூர்ந்தனர்.
80ம் ஆண்டு ஜூலை வேலைநிறுத்தத்தின்போது, ஊழியர்களை தொழிலிலிருந்து நீக்கி, புகையிரத திணைக்களத்தில் சேவையாற்றிய கூடுதலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தொழிலை இழந்தமையினால், வருவாயின்றி, பலர் யாசகம் கேட்கக்கூடிய நிலைக்கும் தள்ளப்பட்டதாக, இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினர்.
மேலும் பலர், நீர்க்கதிக்குள்ளாகினர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது ரணில் தண்டவாளங்களை அகற்றி, மரவள்ளி, நடுவதற்கான யோசனை முன்வைக்கப் பட்டதையும், ஊழியர்கள் மறக்கவில்லை. இந்த எதிர்ப்பு, அரசியல் நோக்கத்திற்கு அல்ல. தம்மை காக்கக்கூடிய, தமக்கு நிவாரணம் வழங்கக்கூடிய புகையிரத திணைக்களத்தை பாதுகாப்பதே, நோக்கமென்றும், ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இங்கு ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளதுடன், புகையிரத ஊழியர்கள் பெரும் ஆத்திரத்துடன் செயற்பட்டனர். புகையிரத சேவையின் நிலைமைகள் தொடர்பில் கண்டறிய வந்த, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், வந்த பாதையை கூட மறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊழியர்கள் ஆத்திரமுற்ற நிலையில் கருத்துகள் தெரிவிப்பதை கண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தமது கடந்த கால தவறுகள் தம்மை தொடர்ந்து துரத்துவதனால், தமக்கு வழக்கமான பின் கதவால் தப்பியோடினர்.
0 comments :
Post a Comment