யாழ். நவகிரி பிரதேசத்தில் 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதணையடுத்து ஆத்திரமுற்ற ஊர் பொது மக்கள் குறித்த டிப்பர் ரக வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம், இன்று இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதுடன் விரைந்து செயற்பட்ட பொலிஸார், வாகனத்தின் சாரதியையும் தேடிப்பிடித்து கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. சம்பவத்தில் பலியான கர்ப்பிணியின் சடலம் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் பகல் 12.45 மணியளவில் நிலைமையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment