Tuesday, August 19, 2014

மஹேலவுக்கு தங்கத்துடுப்பொன்றையும் பரிசளித்தார் மகிந்த!டெஸ்ட் வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவுசெய்தார் மஹேல! (படங்கள்)

17 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கட் அணியின் வெற்றி க்காக பாடுபட்ட மஹேல ஜயவர்தன, பிடியொன்றை எடுத்து இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத் ததன் மூலம் டெஸ்ட் வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். 1997ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி கொழும்பு கெத்தாராம மைதானத்தினூடாக டெஸ்ட் வரம் பெற்ற தெனகமகே பிரபோத் மஹேல டி சில்வா ஜயவர்தன நேற்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வைத்து தனது டெஸ்ட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார்.

அன்று முதல் இன்று வரை அவர் கிரிக்கட் சாதனை புத்தகத்தில் பல முறை தனது பெயரை பதிவு செய்துள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் கிரிக்கட் துறையில் பயிற்சியை பெற்ற மஹேல, இலங்கை அணிக்கு கிடைத்த ஒரு பெக்கிசமாக வரலாற்றில் இடம்பெறும் ஒரு கிரிக்கட் அணி தலைவராகவும் திகழ்ந்தார். தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த கால கட்டத்தை பூர்த்தி செய்துள்ள மஹேல, தனது 37வது வயதில், டெஸ்ட் அரங்கிலிருந்து விடைபெற தீர்மானத்தமை, இலங்கை அணிக்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும்.

அவருடைய குணவியல்புகள் மிக சிறந்த நிலையில் காணப்படுகின்றன. அனைத்து இலங்கையர்களும் இன்று காலை முதல் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தின் பக்கம் தமது கவனத்தை செலுத்தியிருந்தனர். அது இலங்கை அணியின் மற்றொரு வெற்றியை உறுதிப்படுத்தும் தினமாகவும், இலங்கை டெஸ்ட் அணிக்கு அரும் பங்களிப்பு செய்த மஹேல ஜயவர்தனவின் ஓய்வும், இன்றைய தினம் இடம்பெறுவதன் காரணத்திலாகும்.

நாட்டுக்கு புகழை ஈட்டிக்கொடுத்த மஹேல ஜயவர்தனவிற்கு இராஜதந்திர ரீதியாக விடைகொடுப்பதற்கும், வெற்றியீட்டிய அணியை வாழ்த்துவதற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், எஸ்.எஸ்.சி. மைதானத்திற்கு சென்றிருந்தார்.

பாகிஸ்தானை தோல்வியடையச்செய்து, இலங்கை, இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், 105 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 320 ஓட்டங்களை பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 270 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்ஜகி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது, மொத்த போட்டியில், இலங்கை அணியின் ரங்கன ஹேரத் அபாரமான பந்துவீச்சில் ஈடுபட்டார். முதல் இன்னிங்சில் 9 விக்கட்டுக்களை கைப்பற்றிய ரங்கன, இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கட்டுக்களை கைப்பற்றி, இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இதனடிப்படையில் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியது. இன்று டெஸ்ட் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறும் மஹேல ஜயவர்தனவிற்கு, வாழ்த்து தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதியமைச்சர் சரத் ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம்.அஸ்வர் உட்பட மஹேலவின் பெற்றோர், மனைவி உட்பட உறவினர்களும், பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களும் சென்றிருந்ததை, அவதானிக்க முடிந்தது. மஹேலவை இலங்கை அணிக்கு வழங்கிய கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவர்களின் பேன்ட் வாத்தியமும் முழங்கி, மஹேலவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கல்லூரியின் தற்போதைய அதிபர் ரஞ்சித் ஜயசுந்தர உட்பட நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர்களும் அங்கு வருகை தந்திருந்தனர்.

இதேவேளை மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு எஸ். எஸ். ஸி. மைதான த்திற்கு நேற்று திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மஹேல ஜயவர்தனவை வாழ்த்தியதுடன் அவருக்குத் தங்கத்துடுப்பொன்றையும் பரிசளித்தார். தாய்நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பெற்றுக்கொடுத்துள்ள புகழுக்கும் பெருமைக்கும் தமது பாராட்டைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி: எதிர்காலத்தில் தேவையான சகல உதவிகளையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com