ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு கட்சி செவிசாய்க்க வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சொல்லும் கதைகளைக் கேட்பதை விடவும் பொதுமக்கள் சொல்பவற்றையே கேட்க வேண்டும் எனவும், பொதுமக்களின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்த்தால் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் அவர் தெளிவுறுத்தினார்.
கட்சித் தலைவர்களிடம் தான் இதுதொடர்பில் எடுத்துச் சொல்லியுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் 68 ஆவது வருட சிறப்பு நிகழ்வுகளுக்கு முன்னர் பிரதித் தலைவர் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படுமாயின் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment