Thursday, August 7, 2014

பிரதமருக்கான சீருடையை எந்நேரத்திலும் கழற்றிவிட நான் தயார்! - பிரதமர்

இன்றிரவு கழற்ற வேண்டிவருமோ தெரியாது!

“பிரதமருக்கான சீருடையை (கோர்ட்) கழற்றிவிட நான் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றேன். அது இன்றிரவு கழற்றப்படுமோ எனக்குத் தெரியாது. எந்தவொரு பதவியும் இல்லாமல் இருப்பதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்” என பிரதமர் தி.மு. ஜயரத்ன கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

“இன்று என்றும் இல்லாதவாறு பௌத்த சமயத்திற்கு எதிராக பாரிய சக்தியொன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அன்று காலிங்க மாக காலத்திலேனும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை” எனவும் குறிப்பிட்டார்.

புத்தசாசன அமைச்சில் பதிவுசெய்யாத காவியுடை தரித்த பிக்குமார்களில் ஒரு குழுவினர் மேற்கொள்கின்ற இந்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் செயற்படுகின்ற சூழ்ச்சிகள்தானோ என எண்ணத் தோன்றுகின்றது.

எனது கண்கள் காண்பதில்லையாம்.. என் காதுகள் கேட்பதில்லையாம். எனது கண்களும் நன்கு காண்கின்றன. காதுகள் கொஞ்சம் கேட்பது குறைவுதான். நான் பணிபுரிவதற்கு அது இடைஞ்சலாக இல்லை.

புத்தசாசன அமைச்சுக்கும் தனக்கும் எதிராக ராவண பலய அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விதவிதமான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காகவே இந்த ஊடக ஒன்றுகூடலை கூட்டினேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வூடக ஒன்றுகூடலில் புத்தசாசன அமைச்சின் முக்கிய அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com