வாக்கு மூலத்தில் முரண்பாடு!! சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் காயங்களை தானாக ஏற்படுத்தி இனமோதலை ஏற்படுத்த முயற்சித்தாரா?
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்ப றையில் கடந்த ஞாயிறன்று அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன் வழங்கிய வாக்கு மூலம் முரண்பாடு டையதாகவும் சந்தேகத்துக்கு இடமாக உள்ளதாகவும் குறித்த மாணவன் காயங்களை தானாக ஏற்படுத்திக்கொண் டாரா என்பது தொடர்பில் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளிலேயே மேலதிக விசாரணையின் பொருட்டு அம்மாணவன் கைது செய்யப்பட்டதாகவும் காயங்களை தானாக ஏற்படுத்தி பல்கலையில் இனமோதல் அல்லது பாகுபாடு ஒன்றை தோற்றுவிக்க குறித்த மாணவன் முயற்சித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக குறிப்பிட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவனை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த மாணவன் கைது செய்யப்பட்ட விடயமானது கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையம் ஊடாக முகமாலையில் உள்ள அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சமனல கந்த பொலிஸார் அதே பல்கலையில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் யோக நாதன் நிரோஜன் என்ற மாணவனை கைது செய்திருந்தனர். எனினும் முன்னாள் புலிகள் இயக்க உறுபினர் என்பதனாலும் அவரது தொலைபேசியில் காணப்பட்ட சில சந்தேகத்துக்கு இடமான தகவல்களாலும் சமனல கந்த பொலிஸாரால் அந்த மாணவன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டிருந்தார்.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பட்ட குரித்த மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கானது அக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்பறையில் கடந்த ஞாயிறன்று அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment