மத்திய அரசுடன் வடமாகாண சபை இணைந்து செயற்படு மானால் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் வடபகுதிக்கு தொடர்ந்தும் மேலதிக உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய அரசாங்கங்களின் நட்புறவின் அடிப்படை யில் யாழ்.அச்சுவேலியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த கைத் தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் இலங்கை மற்றும் இந்தி அரசாங்கங் களின் 225 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இக்கைத்தொழிற்பேட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள 4 ஆயிரம் இளைஞர், யுவதிகள் நேரடி தொழில்வாய்ப்பு பெறுவதுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுக தொழில்வாய்ப்புக்களை பெறவுள்ளனர். இதன் மூலம் வடபகுதி மக்களின் 40 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது என்றும் தொடர்ந்தும் மத்திய அரசுடன் இணைந்து வடபகுதிக்கான பாரிய அபிவிருத்திகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது. அதற்கான நினைவுக்கல் லினை இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா திரை நீக்கம் செய்து வைத்தார். 145 மில்லியன் ரூபா செலவில் இவ் அரங்கு புனரமைக்கப்படவுள்ள அதேவேளையில் இதற்கான நிதியுதவியினை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment