முழு உலகிற்கும் கடன்பட்டாவது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவோம்! - கல்வியமைச்சர்
முழு உலகிற்கும் கடன்பட்டாவது இலங்கை தேசத்து பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற வேண்டியுள்ளது என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகிறார்.
பலப்பிட்டிய சித்தார்த்த மகிந்தோதய விஞ்ஞானகூடத்தை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
“அரசாங்கம் கடன்பட்டு கோதுமை மா சாப்பிடுவதில்லை. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இலங்கைத்தேச பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்காகவே கடன்படுகின்றது.
இதை விட அரசாங்கத்திற்கு எதுவும் செய்ய முடியாது. இதுதான் மிக்குயர்வானது. ஏனையவற்றைக் கவனிப்பது மாகாண சபைகளினதும் கல்வி அதிகாரிகளினதும் பெற்றோர்களினதும் கடமையாகும்” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment