மேர்வின் சில்வா முதலில் தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும்! - ஞானசார தேரர்
அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனையவர்கள் தொடர்பில் விமர்சனங்கள் செய்வதற்கு முன்னதாக அமைச்சர் மேர்வின் சில்வா தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். தனது மகனை திருத்த வேண்டும். ஏனையவர்களை குற்றம் சுமத்துவதனை நிறுத்திவிட்டு தனது பிழைகளை அமைச்சர் திருத்திக்கொள்ள வேண்டும். மனிதர்கள் கடவுளர் மற்றும் குற்றவாளிகளுக்கு எந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பது எமக்கு தெரியும். அது தொடர்பில் எவருக்கும் எங்களுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டியதில்லை.
வரலாற்றுக் காலம் முதல் மன்னர்களின் அவையில் அந்தரே போன்ற கேமாளிகள் இருந்துள்ளனர். இவர்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்துள்னர்.
0 comments :
Post a Comment