Thursday, August 14, 2014

வெலிகம - கல்பொக்கை நூலகம் புதுமெருகு பெறும்! - நகரபிதா

வெலிகம நகரிலுள்ள பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் வெலிகம - கல்பொக்க நூலகத்தை புதிய வடிவமைப்பில் சகல வசதிகளுடனும் முழுமையாக நிர்மாணிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளதாக வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முஹம்மது தெரிவித்துள்ளார்.

அதற்காக நகர சபையின் ஒதுக்கீடு எதுவும் பயன்படுத்தப்படாது எனவும், அதற்காக வெளிநாட்டில் வசிக்கின்ற தனது நண்பர் ஒருவர் முழுமையாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் நகரபிதா குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்டடம் நூலக சேவைச் சபையின் அனுமதிப்படியும் வரைவின்படியும், நிர்மாண சட்ட ஒழுங்குகளுக்கு அமையவும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மது தெரிவித்துள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com