வளவிற்குள் மனித மண்டையோடு - மட்டக்களப்பில் சம்பவம் !
மட்டக்களப்பு வந்தாறுமூலை களுவன்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மனித மண்டையோடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் பையில் கட்டப்பட்ட நிலையில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் வளாகத்தில் இனம் தெரியாத பொதி ஒன்று கிடப்பதை கண்ட வீட்டின் பெண் ஒருவர் அதனை எடுத்து குப்பையில் போட்டு எரிக்க முற்பட்ட போது அதிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கி யுள்ளது.
இதனை அடுத்து அயல் வீட்டுக்காரர்களை அழைத்து வந்து பார்த்தால் அதில் மனித மண்டையோடு காணப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். குறித்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நீதிபதியின் உத்தரவிற்கு அமைய மண்டையோட்டினை எடுத்து அடக்கம் செய்துள்ளார்கள். குறித்த மண்டையோடு மந்திரவாதிளால் சூனியம் செய்வதற்காக சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
0 comments :
Post a Comment