Thursday, August 14, 2014

பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவேன்! ஜனாதிபதி மகிந்த

பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பலஸ்தீனின் காஸா நகர்மீது இஸ்ரேலிய சியோனிஸ படை மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் காஸா நகர் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.

பள்ளிவாசல்கள், பாடசாலைகள் போன்றவற்றின் மீது சியோனிஸ படைகள் குண்டு வீசி தாக்குதல்களை நடாத்திவருவதால் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து இலங்கையில் பல்வேறு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.

இந்தநிலையில் பலஸ்தீனின் மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஏராளமானோர் பலியாகினர். ஆயிரக் கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

காஸா மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com