"மொழியை கற்போம், தேசத்தை பாதுகாப்போம்" !! முப்படையினருக்கும் தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம்!!
பாதுகாப்பு படையினருக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்ற வருகின்றன. மொழியை கற்று தேசத்தை பாதுகாப்போம் எனும் தொனி பொருளிலான 88 வது பிரிவிற்கு தற்போது தமிழ் மொழி பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மேஜர் ஈ.எம்.டப்ளியு. பண்டார இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இராணுவம், விமானப்படை, கடற்படை, மற்றும் பொலிஸ் ஆகிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு விஷேட தமிழ் மொழியை கற்பிக்கப் படுகின்றது. இதன் நோக்கம் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் தமிழ்மொழி தொடர்பிலான அறிவினையும், நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்வதற்கே ஆகும்.
மொழியை கற்போம், தேசத்தை பாதுகாப்போம் எனும் தொனி பொருளிலேயே இப்பாடசாலை நடத்தப்படுகின்றது. 88 பாடத்திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. தற்போது இந்த பயிற்சி பாடசாலையில் 88 வது பாடத்திட்டம் முன்னெடுக்கப் படுகின்றது. இந்த பாடத்திட்டத்தின் இறுதியில் அரச மொழிகள் திணைக்களத்தினால் இவர்களுக்கான பரீட்சைகள் நடாத்தப்படும்.
பயிற்சி பாடசாலையிலுள்ள வசதிகளை மேம்படுத்தி கொள்ளவும், நலன்புரி திட்டங்களை முன்னெடுக்கவும், நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். அதற்கான நிதியினை பெற்று கொள்வதற்காக செப்டெம்பர் 7ம் திகதி அமல்சிறி பீரிஸின் அந்தானட பாயன சந்த இசை நிகழ்ச்சியொன்று கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment