புத்தசாசன அமைச்சுக்கு ஜனாதிபதியுடன் மிக நெருக்கமான ஒருவர் வருகிறார்...!
புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒருவரை நியமிக்குமாறு அறிவிக்கவுள்ளதாக புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்த்தன உறுதியளித்துள்ளார்.
புத்தசாசன அமைச்சில் ராவண பலய அமைப்புடன் நடாத்திய கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை அளித்ததாக ராவண பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வேளை, முக்கிய விடயங்கள் பலவற்றை அவரிடம் முன்வைத்ததாகவும், இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களைப் போல இதுவும் வெற்றிபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த விகாரைகளுடன் தொடர்புற்று புத்தசாசன அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றுநிரூபங்கள் இனிமேல் மகாநாயக்க தேரர்களின் விருப்பின் பின்னர் வெளியிடுவதற்கும் அமைச்சர் அங்கு உறுதியளித்ததாக சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment