இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்! - நரேந்திர மோடி
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் சமூகத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனும் கூற்றைத் தானும் ஏற்றுக் கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களை ஏனைய இனத்தவர்களுடன் சமனாக நோக்குவது, அவர்களுக்கு நீதி வழங்குவது, அவர்களின் கௌவரத்திற்கு பங்கம் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்வது, பாதுகாப்பான முறையில் செயற்படுவது மிக முக்கியம் எனவும் இந்தியப் பிரதமர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
நீதியான அரசியல் நடவடக்கைகளின் கீழ் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்பட வேண்டுமு எனவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டதாக “த ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான காலம் நெருங்கியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டதாக அவ்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
(கேஎப்)
0 comments :
Post a Comment