மகிந்தவுக்கு முடியாதுவிட்டால் பொதுவேட்பாளர் வெற்றியீட்டியே தீருவார்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிக்க முடியாது விட்டால் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளோம் என சமூக நீதிக்கான தேசிய இக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடுகின்றார்.
இன்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மாநாயக்க தேரர்களை காண்பதற்காகச் சென்ற வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிப்பதற்காக ஆவன செய்வதுடன் குறித்த பொது வேட்பாளரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment