முறையற்ற மின்சாரம் காரணமாக மாணவன் மரணம்!
நுவரெலியா மாவட்டம் மத்துரட்ட பதியபலல்ல கபரகல்ல தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த திரு திருமதி வீரையா அவர்களின் மகனான வீ.அரவிந்தகுமார் பாடசாலை விடுமுறை காரணமாக புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தில் உள்ள தனது பெரிய அப்பாவின் வீட்டுக்கு வந்திருந்த வேலையில் இலய குடியிருப்பின் மேல் காணப்படும் அட்டல் என அமைக்கப்படும் பிரதேசத்தில் ஒலிபெருக்கி சாதனம் ஒன்றை எடுக்கச் சென்ற வேலையில் முறையற்ற மின்சார வயரிங் காரணமாக மின்சார கம்பியை மிதியுண்டு மரணமானார்.
இவர், கபரகல்ல தோட்ட தமிழ் வித்தியாலத்தில் ஆண்டு 09 இல் கல்வி பயின்று வருகின்றார். இந்த விடயம் தொடர்பாக புஸ்ஸல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment