வெலிகம கடலில் தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணைக் காப்பாற்றினர் மீனவர்கள்!
வெலிகம மிதிகமவில் தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்வதற்காக கடலில் பாய்ந்த தாயை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
எனினும், அவரது குழந்தை நீரில் மூழ்கி மரணித்துள்ளதாகத் தெரியவருகின்றது. நான்கு வயதான பன்சன தனஞ்ஜய என்ற குழந்தையே இவ்வாறு மரணத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்லவாயைச் சேர்ந்த தற்கொலைக்கு முயற்சித்த பெண் தற்போது மாத்தறை பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment