ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தில் மற்றுமொரு அமைச்சரவை மாற்றம்! பிரபாவுக்கு பிரதியமைச்சர் பதவி!
ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பிரபா கணேசன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ப.திகாம்பரம் ஆகியோருக்கு பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் பிரதி அமைச்சராக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் 21.08.2014 அன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கடந்த வார இறுதியில் இந்த நியமனங்கள் வழங்கப்பட இருந்த போதும் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் சிங்கப்பூர் சென்றுள்ளதால் வியாழக்கிழமைக்கு பிற்போட்டமை குறிப்பிடதக்கது.
1 comments :
இதிலிருந்து ஒன்று மட்டும் தெட்டத்தெளிவாக புரிகின்றது. தழிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதாத சொல்லும் நாய்கள் அனைவரும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமே தமிழர்களைவ விற்கின்றனர். இந்த பிரபா ஒரு இந்திய வம்சாமவழியான் இலங்கை தமிழர்களை பற்றி கதைப்பதற்கு இவனுக்கு எந்த அருகதையும் இல்லை! ஆனால் ஜனாதிபதி ஏன் இங்வாறானவர்களுக்கு அமைச்சு பதவி கொடுக்கின்றாரோ தெரியவில்லை. இந்திய வம்சாழியான் இந்தியாவில்தான் அமைச்சராக இருக்க வேண்டும் இலங்கையில் அல்ல. தற்போது கத்திக்கொண்டு திரியும் பிரபாவின் சகோதரருக்கும் ஒரு பிரதி இமைச்சர் பதவி கொடுத்தால் அவரும் வாயையும் பொத்தி மற்றத்தையும் பொத்திக் கொள்ளார்.
ஆதை தமிலழ் மக்கள் புரிந்தால் தான் அவர்களுக்கு விடிவு காலம்
Post a Comment