முஸ்லிம் பெண்களின் ஆடையினால் விமான நிலையத்திற்கு பாரிய பிரச்சினையாம்...!
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பெண்கள் சம்பிரதாய முறையிலான முஸ்லிம்களுக்குரிய ஆடைகளை அணிந்து வருவதனால் அங்குள்ள குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பெரும் பிரச்சினைகளைச் சந்திப்பதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற பெண்கள் மட்டுமன்றி, ஏனைய இனத்தைச் சேர்ந்த பெண்களும் அந்நாடுகளின் சம்பிரதாயபூர்வமான ஆடைகளை அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
அவ்வாறு இலங்கைக்கு வரும் பெண்கள் முகமூடி வருவதனால் அவர்களைச் சரிவர இனங்காண முடியாதுள்ளதாகவும் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
1 comments :
Need to remove all cloths and must do check up with naked.
Post a Comment