தாய் தந்தையை தாக்கிவிட்டு ஆசிரியையை கடத்த முற்பட்டவர் கைது!!
அளுத்கமை பிரதேசத்தில், தனியார் வகுப்பு ஆசிரியையான யுவதியின் (வயது 25) தாய் தந்தையை தாக்கிவிட்டு குறித்த ஆசிரியையை கடத்த முற்பட்டவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை இன்று முச்சக்கரவண்டியில் விகாரை க்கு சென்று திரும்பி வரும் போது, செகுசு வாகனமொன் றில் வந்த குழுவினர், அவரது தாய் தந்தையை தாக்கி விட்டு ஆசிரியையை கடத்த முற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உதவியாக மற்று மொரு முச்சக்கரவண்டியில் மூவர் வந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஆசிரியை மீது தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் வெலிபென்னை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகன திருத்தும் நிலையத்தின் உரிமையாளரையே சம்பவம் இடம்பெற்ற 45 நிமிடங்களுக்குள் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment