முரளிதரன் (கருணா), விமல், டக்ளஸ் தங்கள் பிளைகளை உணர்ந்தே ஜனநாயக ரீதியில் பணியாற்ற இணைந்துள்ளனர்
ரொஹான் குணரட்ன அசிட் கருத்துக்களை முன்வைத் திருக்கின்றார்!- வாசு
முரளிதரன் (கருணா) விமல்வீரவன்ச டக்ளஸ் போன்ற வர்கள் தாம் தெரிவு செய்த வழியில் உள்ள பிளைகளை உணர்ந்து ஜனநாயக ரீதியில் பணியாற்ற அரசாங்கத்தரப் புடன் இணைந்துகொண்டுள்ளார்கள் எனவும் அவர்கள் தமக்கென்ற கொள்கையில் இருந்தாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள் எனவும் இதன் மூலமே தேசிய ரீதியான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் இதனைப் புரிந்து கொள்ள வெண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது யுத்தம் நிறைவடைந்து நலலிணக்கம் தொடர்பில் பேசப்பட்டும் தேசிய ரீதியில் வேலைத்திட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவ்வா றான நிலையில் ரொஹான் குணரட்ன அசிட் கருத்துக்களை முன்வைத்திருக் கின்றார். இது முழுக்க முழுக்க தவறானதாகும்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் ரோஹண விஜய வீரவின் கொள்கையை இன்றும் பின்பற்றுவதாக பகிரஙகமாக ஜே.வி.பி கூறிவருகின்றது. அவ்வாறான அவர்களை எவ்வாறு பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியும் என கேள்வியெழுப்பினார்
அண்மையில் பாராளுமன்றதில் விசேட விரிவுரையொன்றை ஆற்றியிருந்த பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும். கருணா டக்ளஸ் உட்பட ஆயுதம் ஏந்தியவர்களுக்கு அரசியலில் இடமளிப்பதால் தமது கொள்கைகளையே தொடர்ந்தும் மக்களிடத்தில் கொண்டு செல்வார்கள் எனத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தனது கடுமையான விசனத்தை வெளியிட்ட போதே இவ்வாறு வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் இன்னமும் பிரிவினைவாத நோக்கங்களைக் கொண்டவர்களாகக் காணப் படுகின்றனர். இவ்வாறான வர்கள் அரசியலுக்குள் வருவதன் மூலம் நாட்டில் மீண்டுமொரு அழிவுச் சூழல் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் பிரிவினைவாத நோக்கம் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதான அரசியலுக்குள் நுழைய அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாரிய தவறிழைத்துவிட்டது. 2009ஆம் ஆண்டே இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் அரசியலுக்குள் வருவதைத் தடுப்பதற்கு புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் வன் முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான மையத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
1 comments :
கூட்டமைப்பு மிகவும் ஆபத்தனதே.
Post a Comment