இலங்கை கடற்படையைத் தாக்குவதற்கு தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிறார் நெடுமாறன்!
தமிழ் நாட்டு மீனவர்களுக்கு இலங்கை கடற்படை உறுப்பினர்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்திய கடற்படையினருக்கு முடியாது போனால், இந்திய மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியவாதி அமைப்பின் தலைவரான நெடுமாறன் ஊடங்களுக்கு கருத்துரைக்கும்போது, “தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மீனவர்களை பாதுகாப்பதற்கு இந்திய கடற்படையினருக்கு முடியாது என்பது தெரிகிறது. தொடர்ந்து அவர்கள் பின்னடைவையே சந்திக்கிறார்கள். அவ்வாறாயின், தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவை தன்வயப்படுத்திக் கொள்வதற்கு இந்திய அரசாங்கத்திற்கு இன்னும் முடியவில்லை. கச்சதீவை பெற்றுக் கொள்வதற்கு பாரதீய ஜனதா கட்சி இந்திய அரசுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment