பொலிஸ் நிலையத்தில் அருவருக்கத்தக்க படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் கைது!
பொலிஸினுள்ளே 17 வயது இளைஞன் ஒருவன் தனது நண்பனுடன் பொலிஸ் அறிக்கை ஒன்றினைப் பெறுவதற்காகச் சென்று, அங்கு தனது கையடக்கத் தொலைபேசியில் படுமோசமான படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் அறிக்கை ஒன்றினைப் பெறுவதற்காக எல்ல பொலிஸ் நின்றுகொண்டிருந்த இந்த இளைஞன் நவீன வகை கைத்தொலைபேசி ஒன்றில் இருந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த முறையை அவதானித்த பொலிஸ் நிலைய நிருவாகப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜீ.யூ. லயனல் சந்தேகத்தின் பேரில் கைப்பேசியைப் பரீட்சித்தபோது, அதில் நிறைய அருவருக்கத்தக்க படங்கள் இருந்ததைக் கண்டுள்ளார்.
அதற்கேற்ப பெறுமதி வாய்ந்த கையடக்கத் தொலைபேசியுடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment