காலாவதியான மருந்து செலுத்தல்...!!
கொழும்பு பம்பலப்பிட்டி அழகியல் நிலையத்தில் உயிரிழந்த பெண் மருத்துவருக்கு காலாவதியான மருந்து செலுத்தப் பட்டுள்ளதாக காவல்துறையினர் கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவானிடம் நேற்று தெரிவித்தனர். அந்த நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது காலாவ தியான ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த மருத்து வரின் உடல்கூறுகள் தொடர்பான மருத்துவ சபை மற்றும் ரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அழகியல் நிலையத்தின் உரிமையாளரை தொடர்ந்தும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதி மன்றும் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment