தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் விமல் வீரவங்சவும், சம்பிக்கவும் உரையாற்ற மாட்டார்கள்! த.தே.கூ வால் முடியுமா?
எதிர்வரும் ஊவா மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார செயற்பாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க சமுகமளிக்க மாட்டார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி தனித்துப் போட்டியிடுவதற்கும், ஜாத்திக்க ஹெல உறுமய போட்டியிடாதிருப்பதற்கும் ஏற்கனவே முடிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாங்கள் அங்கம் வகிக்கின்ற கூட்டணியில் தமது கொள்கைக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுகின்றபோது, அவற்றை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கவும் அதற்கு எதிரான தமது விமர்சனத்தை திறந்த வெளியில் வைக்கவும் சிங்கள மிதவாத கட்சிகள் எனப்படுகின்ற மேற்படி இரு கட்சிகளால் முடிந்துள்ளது. ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழ் மிதவாத முதலாளித்துவ கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சியால் தன்னும் தமது கோரிக்கைகள் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதவிடத்து கூட்டமைப்பிலிருந்து வெளியேற முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment