இயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் உடைந்தது பஸ்! ஹட்டனில் சம்பவம்!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில், ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்னால் பலாங்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இடம்பெற்றபோது குறித்த பஸ்ஸில் 30 பேர் பயணித்துள்ளதாகவும் இவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையெனவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment