45 நாட்களுக்குள் இரு முறை இலங்கைக்கு 152 கிலோ கிராம் ஹெரோயின் கொண்டுவருவதற்கு செயற்பட்ட குழுவொன்றின் முக்கிய புள்ளியொருவரான ஷக்கீல் அஹமட் எனும் பாகிஸ்தானியர் கராச்சியிலிருந்து இலங்கைக்கு வந்தபோது, பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவை விடுதியொன்றில் இருந்து கொண்டு குறிப்பிட்ட பாகிஸ்தானியர் ஹெரோயின் விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஒருகொடவத்த, கட்டுகஸ்தொட்ட போன்ற இடங்களிலும் கைதுசெய்யப்பட்ட ஹெரோயின் தொகையுடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
(கேஎப்)
No comments:
Post a Comment