தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் மூக்கை நுழைத்தார் விக்கி...! விரிசல் மேலும் உக்கிரமம்!
வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கிடையிலான பிரச்சினைக்குள் மூக்கை நுழைத்திருப்பதால் பிரச்சினை மேலும் உக்கிரமம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்து, கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்குப் பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிறிதொருவரைத் தலைவராக நியமிப்பது தொடர்பிலான கருத்துக்கள் கட்சிப் பூசலுக்கு காரணமாகியுள்ளது.
பிரச்சினைக்கிடையே வட முதலமைச்சர் அதற்குள் நுழைந்து, கட்சியின் தலைவராக சம்பந்தனுக்குப் பிறகு மாவை சேனாதிராஜாவை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கருத்துரைத்துள்ளார். அவரது அந்தக் கூற்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ரெலோ, ப்ளொட், ஈ.பீ.ஆர்.எல்.எப், ஐக்கிய தமிழ் விடுதலை முன்னணி என்பன எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
அக்கட்சி இதுதொடர்பில் குறிப்பிடும்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து, பின்னர் கூட்டமொன்றைக் கூட்டி தலைவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment