சேனக்க விஜேசிங்க நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு!
தொலைக்காட்சி நாடம் ஒன்றினைத் தயாரிப்பதற்காக என ரூபா 1,386,000 எனக் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட, தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் சேனக்க விஜேசிங்க வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக நுகேகொட நீதிமன்றம் ஆவன செய்துள்ளது.
குறித்ததொரு நபருக்கு தொலைக்காட்சி நாடகமொன்றைத் தயாரித்தளிப்பதாகக் குறிப்பிட்டு ரூபா 1,386,000 பெற்றுக் கொண்டுள்ள சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு முயன்று வருவதாக நீதிமன்றத்திற்குக் கிடைக்கப்பட்ட தகவலை அடுத்தே நீதிமன்றம் இத்தடை உத்தரவை வழங்கியுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment