தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று அரசியல் யாப்பில் இருப்பதால் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் அந்த மொழிபெயர்ப்பு தேசிய கீதத்தைப் பாடுவதால் எவ்வித பிரச்சினையும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கிறார்.
தெமடகொட விபுலானந்தர் தமிழ் வித்தியாலயத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது குறித்து, கொழும்பு பிரதேச செயலாளர் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் காரணம் வினவியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய கீதம் தமிழில் பாடும் உரிமை குறித்து ஆராய்ந்து, அதனைப் பாடும் உரிமையை உறுதிப்படுத்துமாறு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
No comments:
Post a Comment