கவிஞர் மதியன்பனின் “ஆனாலும் திமிருதான் அவளுக்கு” நூல் வெளியீடு!
காத்தான்குடி கவிஞர் மதியன்பனின் “ஆனாலும் திமிருதான் அவளுக்கு” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு விழா, காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள அர்ராஷித் கேட்போர் கூடத்தில் பன்னூலாசிரியர் கலாபூசணம் அல்ஹாஜ் எம்.எம். மஹ்ரூப் கரீம் எம்.ஏ. தலைமையில் நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வில் வெளியீட்டுரையை வெளியீட்டுப் பணியகத்தின் தலைவர் எம்.எல்.ஏ. அஸீஸ் அவர்களும், விசேட உரையை கவிமாமணி விஸ்வபிரம்மஸ்ரீ சீ.வை.எஸ் காந்தன் குருக்களும் நிகழ்த்தவுள்ளனர்.
“ஆனாலும் திமிருதான் அவளுக்கு” வெளியீட்டு விழாவில் செல்வி ஜுரைஸா அப்துல்லாஹ் இசையிலாப் பாடல் பாடவுள்ளதுடன், “கைவிளக்கு” நூலாசிரியர் பதியத்தளாவ பாறூக் பாவாழ்த்து இசைப்பார்.
ஊடகவியலாளரும், கவிஞருமான ரீ.எல். ஜவ்பர்கான் நூலாளரை அறிமுகம் செய்வார். கவிமணி மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) நூல் நயவுரை செய்வார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment