காணாமல் போனோர் தொடர்பான இரகசியம் அம்பலம்! த.தே.கூட்டமைப்பின் அழுத்தமே காரணம்!!
வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோரில் அனேகமானோர், சட்டவி ரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பியோடியவர்கள் என, தகவல்கள் தெரியவந்துள்ளன. வடபுல பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு, பாதுகாப்பு தரப்பினரால் தேடப்பட்ட பெரும் எண்ணிக்கையிலானோர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தற்போது, யாழ்., கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சாட்சிப் பதிவுகளை பூர்த்தி செய்துள்ளது. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த முறைப்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தத்தின் பேரில் விடுக்கப்பட்ட போலி முறைப்பாடுகள் என, தெரியவந்துள்ளது. காணாமல் போனோர் என, முறைப்பாடு செய்யப்பட்ட அனேகமானோர், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளில் அரசியல் புகலிடம் கோரி சென்றுள்ளதாக, தகவல்கள் தெரியவந்துள்ளன.
இவர்கள் கடல் மார்க்கமாக தமிழகத்திற்கு சென்று, போலி அனுமதிப்பத்திரங்களை பெற்று, அந்நாடுகளுக்கு சென்றுள்ளதாக, தெரியவந்துள்ளது. அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ள நாடுகள், இந்நபர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமையினால், அதுகுறித்த மேலதிக தகவல்களை தேடுவதில், சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, முறைப்பாடுகளை பதிவு செய்தல் மற்றும் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, 6 அமர்வுகளை நடாத்தியுள்ளது.
0 comments :
Post a Comment