ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின் கப்பல்களின் வருகையில் வீழ்ச்சி!
ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வருகின்ற கப்பல்கள் 488 குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அஜித் மான்னப் பெரும குறிப்பிடுகின்றார்.
“ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வருகின்ற 488 கப்பல்கள் குறைந்துள்ளன. நாட்டில் அபிவிருத்தியின்றி கப்பல்கள் எப்படித்தான் வரவியலும்?
தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் பின்னர் கப்பல்கள் எப்படி இலங்கைக்கு வரும்? நாட்டிலுள்ள பெரியவர்களிடமிருந்து வரி அறவிடப்படுவதில்லை. இந்நாட்டிலுள்ள அப்பாவிச் சனங்களிடமிருந்து வரி அறவிடுகின்றார்கள். ஒருநாளைக்கு 31 கோடி ரூபாவை மோட்டார் வாகனத் திணைக்களம் மக்களிடமிருந்து சுரண்டுகின்றது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment