அமைச்சர் ராஜித்தவின் ஆர்ப்பாட்டத்தில் வலுக்கட்டாயமாக பணியாளர்களும்….!
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பினர் மேற்கொண்டுவரும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப் புத் தெரிவித்து நேற்று (07) மாளிகாவத்தை, மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சுக்கு முன்னால் நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மீன்பிடிக் கூட்டுத்தாபனம், மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அமைச்சின் நிருவன பணியாளர்களை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
அனைத்துப் பணியாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனக்கூறி, பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு சென்றதாக சுதந்திர பணியாளர் சங்கம், தேசிய பணியாளர் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாப்பாட்டுவேளை நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பதால் நிறுவனங்களின் அன்றாட செயற்பாடுகள் குழம்பிப் போயுள்ளன எனக் குறிப்பிட்டதுடன், அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்காக தங்களை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடாத்துவது நகைப்புக்குரிய விடயம் எனவும் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment