பாராளுமன்றம் வந்தால் பாராளுமன்ற உறுப்பினரா இல்லை அமைச்சரா? பதில் தருகிறார் கோத்தபாய
அரசியல் பிரவேசம் செய்தால் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பீர்களா இல்லை அமைச்சராக இருப்பீர்களா என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நேற்றிரவு சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வினா எழுப்பினார்.
அந்த வினாவுக்கு விடையளிக்க தன்னால் முடியாது எனக் குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலர், தான் ஜனாதிபதியின் சகோதரனாக இருந்தபோதும் தனது அதிகாரங்களை பொதுமக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தியிருக்கிறேனே தவிர, தவறான வழிக்கு பயன்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி அரசியல் பிரவேசம் செய்யுமாறு எனக்குச் சொன்னால் வருவேன்.. இல்லாவிட்டால் நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளைச் செய்துகொண்டிருப்பேன் ” எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment